(தமிழ் வளர்த்த நகரங்கள் 11. – அ. க. நவநீத கிருட்டிணன்:குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ் – தொடர்ச்சி) 7. நெல்லையின் அமைப்பும் சிறப்பும் திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி தென்பாண்டி நாட்டிலுள்ள பழமையான திரு நகரங்களுள் ஒன்று திருநெல்வேலி. இதன் நெல்லை யென்றும் சொல்லுவர். திருநெல்வேலியென்ற பெயரே நெல்லை என்று மருவி வழங்குகிறது. நகரைச் சுற்றிலும் நெற்பயிர் நிறைந்த வயல்கள் வேலியெனச் சூழ்ந்திருப்பதால் நெல்வேலியென்று பெயர்பெற்றது. சிவபெருமான் எழுந்தருளிய சிறந்த தலமாதலின் திருநெல்வேலி யென்று சிறப்பிக்கப்பெற்றது. தென்பாண்டி நாட்டிலுள்ள பாடல்பெற்ற பழம்பதிகளுள் இதுவும் ஒன்றாகும்….