திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)  8 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் ) நிலத்தைக் கையால் அடித்தால் அடித்தவன் கைதான் வேதனைக்கு உள்ளாகும். அதுபோல், சினத்தைக் கொண்டால் கொண்டவனுக்குத்தான் துன்பம் என்கிறார் திருவள்ளுவர். நிலைநிற்றல் என்னும் பொருளில் ‘நில்’ என்னும் சொல்லிலிருந்து நிலம் என்னும் சொல் உருவானது….

தமிழ்ப்பல்கலைக்கழக நிலத்தை, இந்தி சமற்கிருதப்பள்ளிக்குத் தாரை வார்ப்பதா? –  பெ.மணியரசன் கண்டனம்

சீரழியும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்: கொந்தளிக்கும் பெ.மணியரசன்!   தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா (சி.பி.எசு.இ.பள்ளி) அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதற்குத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981…

“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்

புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015  மாலை 5.30 மேற்குத் தாம்பரம் “களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்   இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால்,   கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும்…