உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்

    ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார் குடும்ப உறவு   ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும்…

தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்

  90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.   சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம்     73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…