தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகளினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறிவருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை, சருக்கரைத் தொழிற்சாலை,  காழிலை(காப்பி)த்தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகளும்  பாறைகளை உடைத்துத் தூசு எடுக்கும் தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால் சாயத்தொழிற்சாலையின் கழிவு நீர், சருக்கரைத்தொழிற்சாலையின் கழிவு நீர், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ச் சுமையுந்துகளிலும் இழுபொறிகளின் மூலமும் எடுத்துச்செல்லப்பட்டுக் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுநீர்கள் …