பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு   21. இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள.   ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும்.   மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர்.   22. அம்மூவாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை   ஆராயுமிடத்து, அங்ஙனம் மூவினமாக வகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும், மொழிப்படுத்தி…