தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.   42.   ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…

தொல்காப்பிய விளக்கம் – 7 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா.   ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும்.   காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று.   33. அன்புஇறந்து  உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென  மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.     உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய…