என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ?
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை – தொடர்ச்சி). என் தமிழ்ப்பணி சொல்லின் எவனோ? 16 கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர் சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மணப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளை அறிவான்; அவளைக் கண்டு அவள் அழகிற்கு மயங்கி அவள்மீது காதல் கொண்டு. அக்காதல் நிறைவேற நெடுநாள் அரும்பாடு…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 102 – அபய வார்த்தை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 101 – ‘சிவலோகம் திறந்தது’ – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்—64 அபய வார்த்தை ஆசிரியர் வியோகமடைந்த பிறகு உலகத்தில் எல்லாம் எனக்கு ஒரே மயக்கமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டேன். ஒரு வேலையும் செய்யத் தோன்றவில்லை. யாரிடமாவது ஏதேனும் பேசவும் விருப்பம் உண்டாகவில்லை. ஆசிரியர் இளமையில் இயற்றிய தியாகராசலீலை என்னும் நூலைக் கையில் வைத்துப் படித்தபடி இருந்தேன். ஆனால் என் உள்ளம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. அடிக்கடி பிள்ளையவர்களது நினைவு எழுந்து துன்புறுத்தியது. அவருடைய கற்பனை மிகவும்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் அ.2. பிணியின்மை – தொடர்ச்சி இம்மூன்றுதாம் உடலில் சமநிலையில் இருந்து உடலை இயங்க வைக்கின்றன. பருவத்தாலும், உணவாலும் உடலில் இம்மூன்றும் தனித்தனியே கூடியும் குறைந்தும் நோயைத் தருகின்றன. இம்மூன்றையும் வைத்தே தமிழ் மருத்துவ முறைகள் பிறந்தன; விரிந்தன. இவை மூன்றிலும் முதலிலுள்ள ‘வளி’ வல்லமை வாய்ந்தது. மற்றைய இரண்டும் அடுத்தடுத்த வல்லமை உடையவை. இதனை உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 15. தமிழின் இனிமை தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்படவரும் “தமிழ் தழிஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்கத் தேவர். ‘ஒண் தமிழ்’, ‘தேமதுரத்தமிழோசை,’ ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 101 – ‘சிவலோகம் திறந்தது’
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்—63 ‘சிவலோகம் திறந்தது’ யுவ வருடம் கார்த்திகை மாத ஆரம்பத்தில் (நவம்பர் 1875) என் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் பாடம் நடைபெற்றது. அவருடைய அசௌக்கியத்தால் ஒரு நாளைக்கு முப்பது பாடல்களே பாடங் கேட்க இயன்றது. தக்க வைத்தியர்கள் கவனித்து வந்தனர். சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதேயன்றி நோயைப்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்அ. 1. பிணியின்மை நோய் – பிணிஅறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் – எனும் நான்கு இயல்கள் – இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன. நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் பெருமளவில் உடன்பிறப்பு. ‘கருவிலே திருவுடைமை’ என்பது போன்று ‘கருவிலே நோயுடைமை’யும் உள்ளது. இக்குழந்தைக்குக் கருவிலேயே நோய்க்கூறு அமைந்தது ‘என்று இக்கால மருத்துவர் அறிந்து…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 16, வள்ளுவர் காட்டும் வழி -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 14. அறா அலியரோ அவருடைக் கேண்மை! நெய்தல் நிலத்து நல்லோன் ஒருவனைக் கணவனாகப் பெற்றுக் களித்து வாழ்ந்திருந்தாள் ஒரு நங்கை. மனைவிபால் மாறாக் காதல் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் கடமையுணர்வும் இடம் பெற்றிருந்தது. அதனால் அவளை மணந்து மனையறம் மேற்கொண்ட சின்னாட்களுக்குள்ளாகவே, தங்கள் இல்லற வாழ்க்கைக்கு இனிய துணைபுரிவதாய பொருளீட்டி வரும் பணியில் சென்றது அவன் மனம், அது கிடைக்கும் கடல் கடந்த நாடுகளுக்கும் கலம் ஏறிச்…
அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 10 -12
(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 7. பொன்னும் பொரிவிளங்காயும், 8. வீண்பேச்சு & 9. போகாத இடம்-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 10. விக்டோரிய மகாராணியும் ஐந்தாம் சியார்சும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்குடோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் சியார்சை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஐம்பது பவுன் மாதந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார். ‘தன் செலவுக்கு இந்தப் பணமும்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 62 தொடர்ச்சிசங்கீத ஒளடதம் நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது. மணிமந்திர…
அறிவியல்திருவள்ளுவம், கோவைஇளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் 2. நாட்டிற்கு ஐந்துஅறிவியல் பதினான்கு அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஓரறி உயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது. திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார்….
என்தமிழ்ப்பணி, புலவர்கா. கோவிந்தனார், 16, வள்ளுவர்காட்டும்வழி
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 13. வள்ளுவர் காட்டும் வழி “தமிழனுக்கு உள்ள ஒரு சிறப்பு அவன் அங்கு சென்றாலும் தமிழ்க் கலாசாரத்தைப் பரப்புவது ஆகும். கடல் கடந்து சென்று தமிழன் பரப்பிய கலாசாரத்தின் சுவடுகள் இன்று உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றன. மது வருந்துவதும், மங்கையரோடு கூடி இன்பம் துய்ப்பதுமே வாழ்வு என்று இருந்த நாகர்களுக்கு, பழத்தமிழன் ஒருவன் மதுவும் மங்கையும் பெற்று வாழ்வது வாழ்வாகாது என்று தமிழ்நாட்டு அறம் போதித்து அவர்களை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி) பூங்கொடி தந்தையின் சீற்றம் மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத் தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த் `துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்! 30 நினைகுவை நீயிப் பழிசெய என்றே நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்! மேதியிற் கீழென மேலோர் நினைக்கச் சாதி கெடுக்கச் சதிசெய் தனையே! வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! 35 இற்செறித்தல் …
