அகல் விளக்கு – மு.வரதராசனார்: 61

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 60. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், “அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை” என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே. பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1107-1120 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1081-1106 இன் தொடர்ச்சி) 1107. படிகவியல்  Crystallography / Crystallology / Crystallogy / Leptology(1)– படிக அமைப்பாய்வியல், படிக அமைப்பியல், படிக இயல், படிகவியல், படிகவுருவியல், பளிங்கியல், பளிங்குவரைபியல், படிக விளக்க ஆராய்ச்சித்துறை எனப் பலவாறாகக் கூறப் படுகின்றன. நாம் சுருக்கமாக உள்ள படிகவியல் – Crystallography / Crystallology /Crystallogy/ Leptology(1) என்பதையே பயன்படுத்துவோம். Crystallography, Crystallology / Leptology(1) )/ Promorphology 1108. படிமலர்ச்சி அறவியல் Evolutionary ethics 1109. படிமலர்ச்சி ஒட்பவியல் Evolutionary…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1081-1106 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1062 – 1080 இன் தொடர்ச்சி)   1081. நோய்மியற்ற விலங்கியல் Gnotobiology 1082.நோய்வகை யியல் nósos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நோய். இங்கே நோய்வகைகைள ஆராய்வதைக் குறிக்கிறது. Nosology 1083 நோவா கதையியல் ஆபிரகாமிய சமயங்களின் (Abrahamic religions) நம்பிக்கையின்படி, நோவா (Noah) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதிப் பெருந் தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் ‘ஆறுதல்’ என்பது பொருள். (விக்கிபீடியா) நோவாவின் அறுநூறாம் அகவையில், இவ்வுலகம் சீர்கெட்டிருந்ததால்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 60

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 59. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி “வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்.” “அண்ணன் சந்திரன்?” “அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்.” “அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்? “இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1062 – 1080:  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1044 – 1061  இன் தொடர்ச்சி) 1062. நேர்நிலை  ஒப்பமைவியல் Simplical homology 1063. நேர்ம இனமேம்பாட்டியல் Positive Eugenics 1064. நொதி நுட்பியல் Enzyme technology /  Fermentation technology 1065. நொதிப் பொறியியல் Enzyme Engineering 1066. நொதிவினையியல் Enzyme kinetics 1067. நொதி யியல் நொதித்தலியல், நொதிப்பியல், நொதிப்பியியல்; நொதியியல், நொதியச் சக்தியியல், நுரைக்கச்செய்தல் சாசுத்திரம், ஊக்கிப்புரதவியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. சுருக்கமான நொதியியல் – Zymology / Enzymology என்பது இங்கே ஏற்கப்பட்டுள்ளது….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 34 தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி அச்சகத்தில் வலது பக்கம் ஓர் உணவுவிடுதி, இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் உணவுவிடுதிக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. உணவுவிடுதியின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1044 – 1061 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1040 – 1043 இன் தொடர்ச்சி) 1044. நுண்ணுயிரி நுட்பியல்            Microbial technology 1045. நுண்ணூசி ஈர்ப்பு உயிர்மி யியல் Fine needle aspiration cytology 1046. இயலறிவு உளவியல்  folk  என்றால் நாட்டுப்புறம், நாட்டார், மக்கள், மக்களினம் எனப் பொருள்கள். இங்கே மக்களின் இயல்பான அறிவைக் குறிக்கிறது. எனவேதான் இவ்வியலின் மற்றொரு பெயர் Commonsense Psychology   என்பதாகும். பகுத்தறிவு உளவியல் என்று சிலர் குறிப்பிட்டாலும் பொதுவாக இயலறிவு உளவியல் என்றே குறிப்பது சிறப்பாகும்.   Folk psychology /…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50

(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி)   இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை & பாலை கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,   பாலை எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும் துற்றிய…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1040 – 1043:  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1022 – 1039 இன் தொடர்ச்சி) 1040. நுண்ணுயிரி மரபியல் Microbial genetics 1041. நுண்ணுயிரி  வளைசலியல் Microbial Ecology 1042. நோய்மி முறிப்பியல் Antibiotic என்பதற்கு ஆண்ட்டி பையாட்டிக்கு, உயிரி எதிர்ப்பி, உயிரி முறிப்பி, உயிரி யெதிர்ப்பி, உயிர் எதிரி, எதிர்  உயிர்ம மருந்து, எதிர்மருந்து, கிருமி முரணி, நச்சொடுக்கி, நுண்மக்கொல்லி, நுண்ணுயிரி முறி, நுண்ணுயிரி முறிப்பியல், நுண்ணுயிரிக் கொல்லி, நுண்ணுயிரிக் கொல்லி (முறி), நுண்ணுயிர் எதிரி, நுண்ணுயிர் எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, நுண்ணுயிர்ப்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1022 – 1039 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1018-1021 இன் தொடர்ச்சி) 1022. நுட்பியல் technology  என்பது ஓர் அகராதியில் அச்சுப்பிழையாக  technlogy என்று இடம் பெற்றுப் பல இடங்களில் பகிரப் பட்டுள்ளது. ஆராயாது முதலில் நானும் அவ்வாறு குறித்துள்ளேன்.  தொழில் நுட்பவியல் என்பது கூட்டுச்  சொற்களாக உள்ளமையால்  நுட்பவியல்>நுட்பியல் போதும் என அதையே பயன்படுத்தலாம். Technology 1023. நுண் தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Micro climatology 1024. நுண் உயிரியல் Microbiology 1025. நுண் குமுகவியல்      Micro Sociology 1026. நுண் நிலநடுக்கவியல் Microseismology…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி) “நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?” “மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?” “அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே” என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன். “உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1018-1021 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  995 -1017இன் தொடர்ச்சி) 1018.  நீர் வள இயல் Fluviology –  நீர்நிலையியல், நீர்வழி யியல், ஆற்றியல் எனக் குறிக்கப் பெறுகிறது. Limnology – நன்னீரியல், ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு, ஏரியியல், நன்னீர் உயிரியல், நீர்நிலைகளியல் எனக் குறிக்கப் பெறுகிறது. நீர் என்றால் நாம் சாக்கடை நீரைக் கருதுவதில்லை. நீர் நிலைகளின் நீர் தூய்மையாக இருப்பதில்லை. எனவே, நன்னீர் என்ற குறிப்பு இங்கே தேவையில்லை. Limno எரி, குளம், குட்டை எனப் பொருள்கள்….