(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25)   தொடர்ச்சி)   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)  7. அறச் சீற்றமும் புதுமை நோக்கும்  துறை தோறும் மண்டிக் கிடக்கின்ற சிறுமைகளும் சீரழிவுகளும் பெருங்கவிக்கோவின் உள்ளத்தை உறுத்து கின்றன. அவரைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. ஐயோ, நம் நாடும் நம் மக்களும் இப்படி இருக்கிறார்களே என்ற வேதனையால் எழும் அறச்சீற்றம் அவர் கவிதைகளில் சூடாகப் பரவிப் பாய்வதை பல இடங்களில் காண முடிகிறது. நமக்குள் தமிழர்க்குள் நாம் காணும் பெருங்குறை என்? நமக்குள் நாமே நாவளர்த்து நயம்…