‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!

  தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை! வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும் நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை! அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் எல்லாரும்  எண்ணியவாறு நல்லன எல்லாம்  எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்! பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழிய! வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க! (-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்…

126 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு – நரேந்திரருக்கு பக்சே அறைகூவல்

  சிங்களக்கொடுங்கோலர்களுக்கு நண்பர்களாகப் பலர் பா.ச.க. வில் உள்ளனர். இருப்பினும் நரேந்திர(மோடி) ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும்; இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நரேந்திரர் பதவியேற்பிற்கு இனப் படுகொலையாளி பக்சே அழைக்கப்பட்டான்;  மாபெரும் மாற்றம் நிகழப்போகிறது என்றெல்லாம் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனால், நரேந்திரர் அழைத்தது தந்திர வினையல்ல;  பக்சேவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியும் அல்ல. இங்கு வருமாறு அழைக்க வைத்த பக்சேதான் தந்திரவினையில் வல்லவன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 126 தமிழக மீனவர்கள் சிங்களப் படைத்துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளன….

இனப்படுகொலையாளன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

இனப்படுகொலைகாரன் பட்சேவை அழைப்பதற்காக, நரேந்திர(மோடி)  தென்ஆசியநாட்டுத் தலைவர்களை அழைத்துத் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டு தமிழர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார். இதற்கு உலகெங்கும்  எதிர்ப்புகள் எழுந்தன. எடுத்துக்காட்டிற்காகச் சில ஆர்ப்பாட்டங்களின் ஒளிப்படங்கள்.