ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! இலக்குவனார் திருவள்ளுவன் முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ்! தமிழ்!” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான். முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச்…

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் :நிகழ்ச்சிப்படங்கள்

  முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில்  நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

‘தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு’ – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்  என்னும் அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும் உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்தஒய்.எம்.சி.ஏ. கட்ட்டத்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில் அறிவார்ந்த பொழிவுகள் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.   மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத் திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்கள்கூடச் செவ்வாய்க்கிழமை பாரிமுனைப் [பகுதிக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது…