அமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அமைச்சர் இராசேந்திர பாலாசியின் பதவி பறிக்கப்பட வேண்டும்! மத்திய அரசின் / மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகளின் தமிழக வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காட்டினர் பிற மாநிலத்தவராகவே இருக்கின்றனர். இதனால் தமிழக இளைஞர்களின் நிகழ்காலமே இருண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களிலும் தமிழர்கள் வேலை வாய்ப்புகள் வினாக்குறியாகி வருகிறது. எனவே, சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் என்னும் அமைப்பு #தமிழக-வேலை-தமிழருக்கே என்னும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது….

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! – சி.இலக்குவனார்

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது!       தம் கட்சிக்குள்ளேயும் தம்மை வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர். ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல் வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது. நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ,…

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்     பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார்.      அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்…