இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 25

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இவர்கள் ஆரியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்தவர்களாவார்கள் என்று கூறலாம். ஒரு சிலர் அவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய காலத்திலோ அக்காலத்தை ஒட்டிப் பின்போ வாழ்ந்திருக்கலாம். சிலர் பெயர்களும் பாடல்களுட் பயின்ற சில சொற்களும் வடமொழியைச் சார்ந்தன என்று கருதப்பட்டன. தேவன், பூதன், கீரன் முதலியனவற்றை வடசொற்கள் என்றே கருதியோரும் உளர். இவையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே. தேவன் என்ற சொல் இனியன், விருப்பத்திற்குரியன், இடத்திற்குரியன் என்னும் பல பொருளினது. பூதன், பூதம்  என்ற தமிழ்ச் சொல்லினடியாகத்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ புலவர் பெயர்                                 பாடல் தொகை        100. கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்          1        101. கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்               1         102. கிள்ளிமங்கலம்கிழார்                      4         103.  கீரம் கீரனார்                                     1         104. குடவாயிற் கீரத்தனார்                    18         105. குட்டுவன் கண்ணனார்                     1         106. குட்டுவன் கீரனார்                               1    107.   குதிரைத் தறியனார்                              1…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’   இனி இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும் காண்போம்.     புலவர் பெயர்                               பாடல் தொகை    1.  அகம்பல்பாலாதனார்                      1    2.  அஞ்சியத்தை மகள் நாகையார்             1    3.  அஞ்சில் அஞ்சியார்                                   1    4.  அண்டர் மகன் குறுவழுதியார்                2    5.  அதியன் விண்ணத்தனார்                         1    6.  அந்தில் இளங்கீரனார்                     1   …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 22

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 6. பழந்தமிழ் இலக்கியம்   மொழி என்பது நேருக்கு நேர் கருத்தினை அறிவிக்கும் கருவியாகப் பயன்பட உருவாக்கப்பட்டது; என்றாலும், எழுத்துகள் உண்டான பின்னர் அது கால இடையிட்டும் நாடு இடையிட்டும் கருத்தினை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படும் நிலையை அடைந்துள்ளது. உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும்; பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். குறிக்கோளை இயம்புவது…

தமிழ்நாடும் மொழியும் 8 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 7 தொடர்ச்சி) கடைச்சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்கக் காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த என்போரின் குறிப்புகளும், பெரிப்புளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம். தமிழ் வேந்தர்கள் சங்கக் காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ…

திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்

(திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2     6.0.விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம்         அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர்,         விருந்தே தானே புதுவது கிளந்த        யாப்பின் மேற்றே.          [தொல்.செய்.540]  என்னும் நூற்பாவழி நுவல்கிறார்.        இரவானாலும் பகலானாலும் புதியவர்கள்   இல்லத்திற்குப் பசியோடு வரும்…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. தொடர்ச்சி) சங்ககாலச் சான்றோர்கள்   2  1. கபிலர்  ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,’ என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை,  பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…

தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்

(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம் 2/3     நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை – சாமி சிதம்பரனார்

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை   திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக் காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச்சேர்த்திருக்க வேண்டும். அறிஞர் சாமி சிதம்பரனார்:…

சொல் ஓவியம் – சாமி.சிதம்பரனார்

சொல் ஓவியம்   பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத்தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஓர் ஒளி விளக்கு பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகிய சங்கக்கால இலக்கியங்கள்.   இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற உவமைகளைப் பார்க்க முடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பதுபோல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.   பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை   மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…