தனித்தமிழ் நூற்றாண்டில் தமிழுக்குச் செய்யவேண்டுவன! – மா. பூங்குன்றன்

தனித்தமிழ் நூற்றாண்டில் தமிழுக்குச் செய்யவேண்டுவன!     உலகில் மொழிகள் பல பெருவாரியாக வழங்கி, ஆட்சி அதிகாரம் பெற்றுப், பேரரசுகளை அமைத்துப் பெருவரலாறு படைத்திருந்தாலும் இன்று அம்மொழிகள் மக்கள் வழக்கிழந்து, இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன.  அவற்றிடை நெடுங்காலத்திற்கு முன்பே தோன்றியிருந்தும் பல இயற்கைப் பேரிடர்கள் கடல்கோள்களால் இனப்பேரிழப்பை எதிர்கொண்டு தன் வளத்தையும் மக்கள் வழக்கையும் இழக்காது அறிவியல் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்தும் வாழ்ந்து கொண்டுமுள்ள மொழி தமிழ்மொழி.   கழகம் அமைத்துத் தமிழ் வளர்த்தும், ஒரு மொழி வைத்து உலகாண்டும் இருந்த மன்னர்கள்…

காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காலந்தோறும் தமிழ்  வரிவடிவம்!     எந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின்…