பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்

சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபா, சென்னை 600 018 அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்

தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஐம்பெருவிழா

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015  மாலை 6.00 இராயப்பேட்டை, சென்னை 14   பேரா.முனைவர் சி.இரத்தினசபாபதி பவளவிழா  பவளவிழா மலர் வெளியீட்டு விழா நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் பிறந்தநாள் விழா முனைவர் ப.முருகையன், முனைவர்  வச்சிரவேலு நூல்  வெளியீட்டு விழா பேரா. முனைவர் சீவா வச்சிரவேலு  பணிநிறைவு பாராட்டு விழா  

பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா

வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு   பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…

வண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே!

   நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால்,  பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர்.   (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து   மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர்.  இதன் சார்பில்  1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும்…