பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! – இராமதாசு கண்டனம்

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி  நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! இராமதாசு கண்டனம்   சென்னை: பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை  நீக்குவதால் அது குலக்கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர்  மரு.இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன்  நீக்கப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவடேகர்…

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே!    அதிமுக வெற்றி பெற்றதற்கு “வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”, “இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில்,  ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள்  நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச்  செயல்பட்டு அதனை வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை.   அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள் 172இல்  அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக…

யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யார் வந்தாலும் வரவேற்போம்!  வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார்  ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்!   அஇஅதிமுக வின்  மீது மக்கள் காணும் குறைகள்  வேறுகட்சி மீது இருந்தது என்றால்,…

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக     “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து  வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு!   புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள்…

வாக்கு யாருக்கு?

  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.   இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…