நாம் தமிழர் என்று பாடு

  நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு! போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில் போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு. நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு? தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம் தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு! மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய் முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு! நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து நாம்தமிழர்…

பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்.

  பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும் சிட்டுக் குருவிகள்; குருவியின் கூரிய மூக்குப் போல அவருடைய மொழி கூர்மை பெற்றுவிட்டது.   ‘‘அழகின் சிரிப்பு’’ என்ற கவிதை நூலின் தலைப்பே பட்டறிவு மொழியின் அதிகாரத்தை உவமை நயத்துடன் எடுத்துக் காட்டவில்லையா?   அழகு…