வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு

  பேரன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும்  இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  இம்மாதம்  கார்த்திகை 09, 2049  ஞாயிற்றுக்கிழமை 25-11.2018 அன்று கிழக்கு நேரம்  இரவு 9:00 மணி  முதல் 10:00 மணிவரை  பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத  இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டத்தில்   ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்’  என்ற  தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார்  சிறப்புப் பேச்சாளர், பேராசிரியர் பா. இறையரசன் [தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)].  இந்த இலக்கியக்கூட்டத்தில்  நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு  இலக்கிய இன்பம் பெற  அன்புடன் அழைக்கின்றோம்.

 ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை -2 வெளியீட்டு விழா

    கார்த்திகை 24, 2047  ஞாயிறு 10.12.2017 மாலை 5 மணி  அரினா அரங்கம், அண்ணாநகர் வட்டகம் (இரவுண்டானா),   W-100, 2 ஆவது நிழற்சாலை, இந்தியன் வங்கி மாடி, சென்னை – 40.  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை  புத்தகம்-2.  (விண்ணகரக் கோயில் & கடம்பூர் மாளிகை , அத்தியாயங்கள்) (படக்கதை) வெளியீட்டு விழா   வரவேற்புரை : வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: திரு சீதா. செந்தாமரைக் கண்ணன் இ.வ.ப.,  வருமான வரி முதன்மை ஆணையர் (ஓய்வு). சிறப்புரை : அருள்திரு சகத்து கசுபர், தமிழ் சங்கம் 4. நன்றியுரை : திரு சரவணராசா பொன்னுசாமி, நிலா படக்கதை புத்தக வெளியீட்டகம். www.nilacomics.com தொலைபேசி: 26213146,. அலைபேசி: 9884806302.   முனைவர் பா.இறையரசன்,  செயலர், …

தமிழ் நாட்டு வரலாறு – பா.இறையரசன்; நூலாய்வு

தமிழ் நாட்டு வரலாறு – நூலாய்வு பக்.352; உரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108;  044-2526 7543.   மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது.   தொன்மையும் பழைமையும் உடைய…