(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை-தொடர்ச்சி) பூங்கொடி பிறமொழி புகுதல் நம்நாட் டகத்தே ஈயமிலாப் புன்மொழிதிணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;தாய்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில்நோய்என மடமை நுழைந்து பரந்தது; 85எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றாே?என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;நெஞ்சங் கனன்றதுகன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் 90ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்நினைவர் இதுதான் நெடுநாள் இயல்பு;கனலும் புனலும் கரைமிகின் தடுக்கஉலகில் ஒருபொருள் உளதென அறியோம்; மூக்கினை வருடின்…