சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 1   அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது;  எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க…

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!     தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை வளப்படுத்துவதுதான் முறையாகும். இல்லையேல் தமிழ் நாளும் நலிந்து போகும்.   சிலர், ஆங்கிலம் உலக மொழியானதன் காரணம், பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதுதான் எனத் தவறாக நம்பியும் எழுதியும் பேசியும்…