தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி, 12.09.21

தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தலை சிறந்த தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணிகளையும் செய்துள்ளார். தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழித் திருமணம், குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது நினைவஞ்சலி நிகழ்வு, பேரவையின் சார்பில் ஆவணி 27, 2052 ,  செட்டம்பர்…

மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நேயம் மறந்தாலும் மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே!   தன் எளிமையாலும் இளைஞர்களிடம் நம்பிக்கை விதைக்கும் உரைகளாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும், சொல்லப்போனால் உலகளாவிய புகழ் பெற்றவர் மேதகு அப்துல்கலாம். அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. முகநூல் பக்கங்களிலும் பதிபேசிப் பக்கங்களிலும்(வாட்சுஅப்) இப்பொழுது மிக மிகுதியாகப் பகிரப்படுவன அவரைப்பற்றிய நினைவுகளும் புகழுரைகளுமே! சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவராகத் திகழ்கிறார் தமிழ் வழிபடித்துத் தரணி ஆள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார்….

இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!   நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….