புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டு

  கார்த்திகை 23  ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்   புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை

நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை

புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்  இலக்கிய வேந்தன்  அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா

தனித்தமிழ்த் திருநாள் – அண்ணா

தனித்தமிழ்த் திருநாள்   பொங்கற் புதுநாளெனும் தமிழர் திருநாள் பொய்யுரையின் மீது கட்டப்பட்ட பூசாரி விழாக்களிலே ஒன்றல்ல!  தனித்தமிழ்த் திருநாள்! கருத்தளிக்கும் பெருநாள்! தமிழன், உழைப்போரை உயர்த்திடும் பண்பையும் உழைப்பின் பயனை ஊருடன் கூடி உண்டு, இன்பம் பெறும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வந்தது பொங்கற் புதுநாள்! அறுவடை விழா!  விதைக்காது விளைந்த கழனியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது அரிசியாக்கி, வேகாது வடித்தெடுத்து, உண்ணாது காக்கைக்கு வீசிடும் உலுத்தர் விழாவல்ல! உழைத்தோம், பலன் கண்டோம்; கண்ட பலனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம் என்ற…

மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! – அண்ணா

மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு!   மகிழ்ச்சியே மயக்கம்;  மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினோர் அல்லர் நம் தமிழர்! எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டா என்று இருத்தல் நன்றன்று. வினை, வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்திட்டால் பின் வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ளல் வேண்டும். அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால்தான், வாழ்வில் வளம் காண…

உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா

உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு!  அறுவடை விழா தரும் அறுசுவை உண்டியும், அழகுத் துணியும், தூய ஆடையும் அவைதரும் அகமகிழ்வால் வளரும் அன்பும் அருளும் ஆர்வமும் இன்பமும் ஈகையும் உவகையும் ஊக்கமும் போற்றி வரவேற்கத்தக்கதே. பொன்னும் மணியும் கொழிக்கும் நன்னாட்டிலே பிறந்தோம். வாழ்வின் பயனை நுகர்ந்தோம் என்று களி கொள்ளத்தான் வேண்டும்.   எரிமலையும் சுடுமணலும், நெடுங்காடும் பெருவெள்ளமும், வறண்ட நிலமும் வளமற்ற நீர்நிலையமும் படைத்த இடமாக இன்றி, நஞ்சையும் புஞ்சையும் நடு நடுவே நறுமணப் பூங்காவும் பழமுதிர்ச் சோலையும் பாங்குடன் விளங்கும் குன்றும், மலையும்…

தாய்க்குலத் தாரகை தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு, சென்னை

  ஆனி 01, 2047 / சூன் 15, 2016  உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை ஈப்போ ஔவைப் பணிச்செல்வி தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு  -புலவர் இளஞ்செழியன்  

சங்கத்தமிழ் வீரனின் அம்பும் இராமனின் அம்பும் – அறிஞர் அண்ணா

இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா?  வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான், ஒரு புலியைக் குறி வைத்து. 1. அம்பு வில்லினின்றும் விடுபட்டு மிக வேகமாகப் புலியின் உடலை ஊடுருவிச் சென்று, அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும் அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது.புலியைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது. தடையேற்பட்டதால், 1. எனவே,…