பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன் மரபு : 13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும்.  ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் உள்ள ‘ம்’ அரை மாத்திரை பெறாது. கால்மாத்திரையே பெறும் என்பர்.  14. உட்பெறு புள்ளி உருவாகும்மே….