தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்

“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…

நம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்? – கி.வா.சகந்நாதன்

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை….