(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…