திருக்குறள் அறுசொல் உரை – 098. பெருமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம் தொடர்ச்சி) திருக்குறள் 02. பொருள் பால் 13. குடி இயல்  098. பெருமை     நல்ஒழுக்கக் கடைப்பிடியால் பணிவாக    உள்ளத்துள் பெருகும் மகிழ்உணர்வு.   ஒளிஒருவற்(கு), உள்ள வெறுக்கை; இளிஒருவற்(கு),      ”அஃ(து)இறந்து வாழ்தும்” எனல்.         உள்ளத்துள் நிறையும் பெருமைதான்         செல்வம்; அதுஇன்மை இழிவுதான்.   பிறப்(பு)ஒக்கும், எல்லா உயிர்க்கும்; சிறப்(பு)ஒவ்வா     செய்தொழில் வேற்றுமை யான்.         பிறப்பால் வேறுபடார்; செய்தொழில்         நுட்பத்தால், பெருமையால் வேறுபடுவார்….

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 2: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத              வாழ்வு கண்ட தமிழகம்        மகிமை கெட்டே அடிமைப் பட்டு              மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல்லாரே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே,   தமிழ னென்ற பெருமை யோடு              தலைநி மிர்ந்து நில்லடா!        தரணி யெங்கும் இணையி லாஉன்              சரிதை கொண்டு…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 1: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01    இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே!…