நவநேசனின் தற்றொழிலுக்கு உதவுவோம்!

தளபதி கிட்டு குண்டுவீச்சுக்கலன் படையணி நவநேசனின் இன்றைய  இரங்கத்தக்க நிலை!     நந்தகுமார் நவநேசன். ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,அல்லது சிங்களத் தேசியக் கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில், 2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழே இயங்காமல், தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கைச் சுமை மறு பக்கம்  எனத் தனது அன்றாட வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார்.   எனினும் தன்னால் ஒரு  தற்றொழில்…

ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தனுக்கு உதவுங்கள்!

ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு உடனடியாக உதவுங்கள்!   ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டுசென்ற ஈழத்தின் இசைக்குயில், எமதன்பிற்கினிய சாந்தன் அண்ணா அவர்கள் இன்று தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத் தூய்மை செய்து கொண்டு, அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றார்.   மாற்றுச் சிறுநீரகமும்  ஆயத்தமான நிலையில் அதற்கான நிதியுதவி மட்டுமே தாழ்ச்சியாகின்றது. உடனடியாக மாற்றுச்சீரகம் பொருத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை இப்போதைய செய்தி.  …

எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு

  கிளிநொச்சி  சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு  இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான  எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி  முதலியன அன்பளிப்பு.    கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம்  பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல  இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும்…

திருவண்ணாமலையில் ஆசிரியையின் முயற்சியால் அரசுப் பள்ளிக் கட்டடம்

   திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுட்பகிரி என்னும் சிற்றூர். வானம் பார்த்த பூமி. இச்சிற்றூரில் உள்ள பள்ளியானது கல்நார் (Asbestos) ஓட்டினால் ஆன கட்டடம். அந்த பள்ளி 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும்; வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் வெப்பம் தகிக்கும். இருப்பினும் இவற்றையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும்…