விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!

நாட்டினருக்காகத் தன்னை ஒப்படைத்த விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!     சன்னங்களையும், தகடுகளையும் தன் உடலில் தாங்கி வேதனையில் வாடும் முன்னாள் போராளி பிறையாளனின் வாழ்வு செழிக்குமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை களமுனைப் போராளியாகப் பல களம் கண்டவர்தான் பிறையாளன் என்றழைக்கப்படும் நல்லையா இயேசுதாசன். இலங்கைப்படையினரின் அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்வை  ஒப்படைத்தவர்களில் பிறையாளனும் ஒருவர்.   தமது வாழ்க்கையை ஈகம் செய்து, உணர்வுகளையும்,…

கைவிட முடியாத கனவு! – பா.செயப்பிரகாசம்

  தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை…

தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி

தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி இலக்குவனார் சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப் பணி ஆற்றுவதோடு நின்றுவிட வில்லை பேராசிரியர். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே ‘என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’ இதழ் வாயிலாக வும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த்தேசியம் என்பதை வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா! உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா!  என்று தமிழக விடுதலை…