அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) – பாத்திமா மைந்தன்

அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு)   மணமுறிவு / மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்கு’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்கு’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும்.   இசுலாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இசுலாம் ஊக்குவிக்கிறது.  வாணாள்…

வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?

திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை   திருமணங்கள்   உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது.   வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…

தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!

குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா?     இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும்.  கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…