கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்- இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு, முந்நாள் முன்னர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் வழங்கியுள்ளார். பொதுவான பணி குறித்த அறிவுரையோ கட்டளையோ அல்ல இது. தமிழ் வளர்ச்சிக்கு உதவக் கூடிய, தமிழ் உணர்வைப் பரப்பக்கூடிய நல்லுரை. அவர்,   தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றாடம் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக்  கட்டாயம் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய…

அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்

அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை    மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம்.   எழுத்தாளர்கள்,…