(தந்தை பெரியார் சிந்தனைகள் 15 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 16 2.  குமுகம்பற்றிய சிந்தனைகள்    அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,அறிஞர்பெருமக்களே,மாணாக்கச்செல்வங்களே. இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் குமுக(சமூக)ச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் குமுகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன். மனிதன் என்ற வாழும் உயிரியும்  அசைவிலியாகவும் தாவரமாகவும் நிலைத்திணையாகவும்(அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும்) இருந்த  பொருள்களிலிருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு, புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்றஇத்…