மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசிருக்கையில் அமர்ந்துள்ளது. வாழ்த்தி வரவேற்க வேண்டிய மாற்றம் இது. ஆனால், திராவிட மெய்யியத்தை(தத்துவத்தை) விரும்பாதவர்களும் ஆரியப் பித்தர்களும் திராவிடம் வீழ்ந்து விட்டது; 60 ஆண்டுகளாக ஆண்ட திராவிடம் ஒழிந்து விட்டது; 67இற்குப் பிறகு மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் விரட்டப்பட்டன; என்று கூக்குரலிடுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர்; இனி நம் ஆரிய ஆட்சிதான் என்று கொக்கரிக்கின்றனர். ஆனால், உண்மையில் மலர்ந்துள்ளது திராவிட ஆட்சிகளின் நீட்சியே. திராவிடம், திராவிடம் என்று உணர்வுடன் வாழ்பவர்கள் யாவரும் …