ஒளவையார்:6 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 15 2. ஒளவையார் (தொடர்ச்சி) இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று….

தமிழரின் கடல் வாணிகம் – செங்கைப்பொதுவன்

நாவாய் = பெருங்கப்பல் கலம் = சிறுகப்பல் சேர வேந்தன் வானவன் மேலைக் கடலில் நாவாய் ஓட்டிப் பொன்னுடன் மீண்டான் அந்தக் கடல் வாணிகத்தின்போது பிற கலம் கடலில் செல்லாது பாதுகாக்கும் படையுடன் சென்றான்   மலையமான் பெண்ணையாறு பாயும் நாட்டுக்கு உரிய தலைவன். முள்ளூர் நாட்டைத் தனதாக்கிக் கொண்டவன். பகைநாட்டை வென்று அவரது பட்டத்து யானையின் ஓடையில் இருக்கும் பொன்னைக் கொண்டு வாடாத் தாமரை செய்து பாணர்க்கு விருதாகச் சூட்டி மகிழ்ந்தவன். பெண்புலவர் பாடுகிறார். வறுமை நிலையில் வந்துள்ள நான் வல்லமை அல்லாதவள்…