8.] மலையியல் கலைச் சொற்கள்     மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.   குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.   சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரரொலிக்கும மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால் நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும். பின்வரும் சொல்…