மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது. மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை…

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!  தொடர்ச்சியே எடப்பாடி அரசு! – இலக்குவனார் திருவள்ளுவன்

அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!   தொடர்ச்சியே எடப்பாடி அரசு!   அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை.   இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும்…

வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய  மாநில அரசுகள்! இலக்குவனார் திருவள்ளுவன்

வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய  மாநில அரசுகள்!   இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து  வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில்  உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா…

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது?  ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும்  உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர்.  அரியலூர் மாவட்டம் செந்துறை  அருகே  உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …

மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! – தாலின்

பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! தாலின் அறிக்கை  “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! – ஆ. இரா.அமைதி ஆனந்தம்

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! முன் ஒரு காலத்தில், (1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன  என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!   உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக  மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.  இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது  முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும்.  அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும்  …