செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்

செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம்     முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.   முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை.   கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா…

தவறாமல் வாக்களிப்போம்! தக்கவர்க்கு வாக்களிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தவறாமல் வாக்களிப்போம்! தக்கவர்க்கு வாக்களிப்போம்! தேர்தல் நாள் – வைகாசி 03, 2047 / மே 16, 2016     தேர்தல்நாளில் வாக்களிப்பது நம் கடமை. கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் “நீங்கள் யாருக்காவது வாக்களியுங்கள். ஆனால்,தவறாமல் வாக்களியுங்கள்” என்கின்றனர்.    வாக்களிப்பது நம் உரிமை! அதனைத் தக்கவர்க்கு அளிப்பதே நம் கடமை!   நம்மை ஐந்தாண்டுகள் ஆளப்போகிறவர்கள் நம் குறைகளைக் களைபவர்களாகவும் நமக்கு உற்றுழி உதவுநர்களாகவும் இருக்க வேண்டும். யாருக்கோ வாக்களிப்பதன் மூலம் நாம், நம் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள்  ஆவோம்!  அதுபோல்…

மாற்றம் – கவிக்கோ ஞானச்செல்வன்

மாற்றம் ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள் காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள் பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ? நெறிகள் மாறா நீணிலத்தில் நிற்பன நடப்பன மாறுவதால்! வறியோர் செல்வர் மாற்றமெல்லாம் வாழ்வின் உண்மை உரைப்பனவே! ஆடைகள் அணிகள் மாறிடினும் அரசியல் கட்சிகள் மாறிடினும் ஓடைகள் யாறுகள் மாறிடினும் உயர்மலை மடுவாய்…

மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள்! காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! நங்கை ஒருத்தி தன்மனத்துள் நல்லிளஞ் சிங்கம் ஒருவனையே தங்கும் அன்புக் கணவனெனத் தாங்கிய பின்னை மாற்றுவளோ? அங்கம் குழைந்தே அழதழுதே ஆண்டவன் அடிசேர் அடியார்கள் பங்கம் நேரத் தம்மனத்தைப் பாரில் என்றும் மாற்றுவரோ? அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள்! பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ?…