மீட்டுருவாக்கம் செய்க  வடமொழிப் பெயர்ப்படுத்தல்- அதாவது எப்பெயரையும் வடமொழிப் பெயராக மாற்றுதல் ஒரு ‘சமக்கிருதமயமாக்கும்’ முறையாகும். அங்கயற்கண்ணி என்பதை, மீனாட்சி என்னும் சொக்கரைச் சுந்தரர் என்னும் மாற்றினர். ‘தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோயில்களுக்கும் அங்கு குடிகொண்டுள்ள இறைவன் இறைவியர்க்கும் நல்லநல்ல தமிழ்ப்பெயர்கள் வழங்கின. அவை அனைத்தும் பொருள் புரிந்தும் விளங்காமலும் வடமொழிப் பெயர்களாக்கப்பட்டன. இளையாத்தன்குடியை இளையாற்றங்குடி எனத் தவறாக எண்ணிக்கொண்டு, ‘விச்ராந்திபுரம்’ எனப் புராணம் எழுதியதை என்ன சொல்ல? ‘பாலை நிலையம்’ என்பதில் பாலுக்கு எவ்விதத் தொடர்புமில்லாதிருக்கவும், அதை ‘சீரத்தலம்’ எனப் பெயர்த்துச் ‘சில்ப’ சாத்திரமாக்கியதை…