உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை

என் சரித்திரம் சிவமயம்முகவுரை திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்“திருவேயென் செல்வமே தேனே வானோர்        செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்கஉருவேயென் னுறவேயென் னூனே ஊனி        னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்        கருமணியே மணியாடுபாவாய் காவாய்அருவாய வல்வினை நோயடையா வண்ணம்        ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”திருச்சிற்றம்பலம் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்   அ.  முகவுரை, பதிப்புரை முகவுரை   இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.   தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது. வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய…