இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…

வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு

தென் குமரியில்  உலகத் திருக்குறள்  மாநாடு   மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பு, சப்பானிய, கொரிய, சீனக் கூட்டுறவோடு சென்னையில் செயல்பட்டுவரும் ஆசியவியல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடு இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புக்களும் இணைந்து  அனைத்துநாட்டுக் கூட்டு முயற்சியாகத் தமிழகத்தின் தென்கோடிக் குமரியில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை அடுத்து வரும் வைகாசி 03-05 / 2048 / 2017ஆம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றன.   அனைத்துலகு நோக்கிய திருக்குறளின்…

மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு

மொரிசியசு   நாட்டில்  திருக்குறள்  தேசிய மாநாடு   மொரிசியசு  நாட்டில்  திருக்குறள்  தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல்  நிறுவனத்தின்  கூட்டுறவோடு   இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின்  முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும்,  மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக…