அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர் – மு.அருணாசலம்

அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர்   இவ்வுரை அரும்பதவுரை மட்டுமன்று. வினைமுடிபு காட்டுதல், பொருள் தொடர்பு காட்டுதல், அரங்கேற்றுக் காதையிலும் கானல் வரியிலும் இன்று அடியார்க்கு நல்லார் உரை இல்லாத பிற பகுதிகளிலும் பேருரையும் பெருவிளக்கமும் கூறுதல், மேற்கோள் தருதல் முதலிய பகுதிகளைப் பார்க்கும்போது, இவ்வுரை அரும்பதவுரை அன்று, அரிய உரை என்றே கருதத் தோன்றும். சில இடங்களில் விரிவான பொழிப்புரையே கூறியிருக்கிறார். (3:26: 36 பார்க்க); இதைத் தொடர்ந்து அரும்பதவுரை மட்டுமல்லாமல் விளக்கவுரையே கூறிவருகிறார். இவற்றால் இவர் மிக்க விரிவு பெற்ற உரை…

அரும்பதவுரையாசிரியரால் அறிய வரும் செய்யுட்கள் எண்ணிறந்தன. – மு.அருணாசலம்

அரும்பதவுரையாசிரியரால் அறிய வரும் செய்யுட்கள் எண்ணிறந்தன. அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் காட்டிய நூல்கள் மிகப்பல. இசைத்தமிழ், நாடகத் தமிழ் பற்றி இவர் காட்டும் மேற்கோள் செய்யுட்கள் எண்ணிறந்தன. இவை எந்த நூல்களில் உள்ளன என்று அறிய வழியே இல்லை. அகத்தியச் சொல்லதிகாரச் சூத்திரம், இசைத் தமிழ் பதினாறு படலத்துள் கரணவோத்து, செயிற்றியனார் என்பன பெயர் குறிப்பிட்டுச் சொல்கிறார்; நூல்கள் இல்லை… பெயர் தெரிந்தும் கிடைக்காத நூல்கள் ஆசிரிய மாலை, வளையாபதி. திருக்குறள் முதலான நூற்கருத்துகளை, நூற்பெயர் குறிப்பிடாமலே தம் உரைநடையில் எழுதிக் கொண்டு செல்வது இவர்…