எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு

எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அட்டோபர் 2 அன்று சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிசா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.        இவ்விழாவில், சிறுவர் இலக்கியப் படைப்பிலக்கியங்களை கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேசின் பங்களிப்பைப் பாராட்டி, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருட்டிண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார்.      வந்தவாசி நூலக…

வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம்          

       அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு       அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.     மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வந்தவாசியை…

கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…

இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றது.  இந்த மாதம் எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.  அமெரிக்க நேரம்: ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 07, 2052 /அட்டோபர், 24ஆம் நாள், இரவு 8:30மணி கிழக்கு நேரம் (EDT)  இந்திய நேரம் IST : திங்கட்கிழமை, ஐப்பசி 08,…

புதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்

புதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்       கவிஞர்  சென்சி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ குறும்பா (ஐக்கூ கவிதை) நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் சாலையிலுள்ள  தலைமை மாளிகை (சுப்ரீம் மேன்சன்) தரைதளத்தில்  புதுமையான முறையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.          இவ்விழாவிற்குத் தலைமையேற்று, கவிதை நூலினைப் பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட்டார்.  கவிஞர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். கவிதை நூலைத் திறனாய்வு செய்து…

காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ்க்குறும்பா நூற்றாண்டு விழா

       அடையாறு காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ்க் குறும்பா நூற்றாண்டு விழா நடைபெற்றது.       இவ்விழாவிற்கு கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு தலைமையேற்றார். வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார். நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேசுகுமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் முதலரன 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை (ஐக்கூ)வாசித்தனர்.  தமிழின் மூத்த குறும்பாக் கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது  குறும்பாக் கவிதைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்….

புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.

தமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும்  புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.        வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை  நாள் ஆகிய முப்பெரும் விழாவில்,  தமிழ்த் திரையுலகில் வாழ்வின்  பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும்  இசையாலும் புதிய  காலக்கட்டத்தைப் படைத்த  அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…

வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு இலக்கிய விருது

  வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு சிறந்த  ஐக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது          கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான புதினம், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை,  ஐக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு,உரிய படைப்பாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும்  தலைக்கு உரூ.5000/- பணமுடிப்பும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டன.       வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேசு. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளராகவும் உள்ள கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ …

வந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை

வந்தவாசி   கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில்  அருவினை   + 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று வந்தவாசி அரசுப் பள்ளியின் இரட்டையர்கள்  அருவினை அண்மையில் வெளியான + தேர்வு முடிவுகளில் வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட  அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று  அருவினை புரிந்துள்ளனர். 2016-17 கல்வியாண்டிற்கான + தேர்வு முடிவுகள் சித்திரை 28 –  11/5 அன்று வெளியாயின. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி,…

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! – உலகப் புத்தக நாள் விழாவில் பேச்சு –

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே!       வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார்.        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.         வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி…

மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன

தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில்  மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன!   சென்னை.  மார்கழி 09,  திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய  ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.   இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார்.     சப்பானிய  ஐக்கூ கவிதைகள் மாக்கவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது….