இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…

தொல்காப்பிய விளக்கம் – 8 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 36. நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே. நெட்டெழுத்து  இம்பரும் =  நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும் = இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல்லின் இறுதியிலும், குற்றியலுகரம் = க குறைந்த ஒலியையுடைய உகரம்(ஒரு மாத்திரையில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் உகரம்), வல்ஆறு ஊர்ந்து = வல்வலின மெய்களாம் க், ச், ட், த், ப், ற் என்பனவற்றின்மீது பொருந்தி வரும். குற்றியலுகரம், மொழியிறுதியில் நிற்கும் வல்லின மெய்களைப் பொருந்தி வரும். இரண்டு…

தொல்காப்பிய விளக்கம் – 7 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா.   ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும்.   காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று.   33. அன்புஇறந்து  உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென  மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.     உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய…