(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)   ஆரியக் கசப்பு உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் தேவர்கள் என ஆரியர்கள் தம்மைக்கூறி இடைத்தரகராய் இறை வழிபாட்டில் நடந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஓர்இறைக் கொள்கையுடன் தன்மான எண்ணம் கொண்டவர் அக்காலக் கவிஞர் கண்ணதாசன். எனவே, தேரில்லை சிலையில்லை தேங்கா யில்லை தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை (மாங்கனி : 1.வஞ்சியில் விழா 7 :1-2)  என அருமையாக ஆரியக் குறுக்கீடற்ற வழிபாட்டை விளக்குகிறார். ‘மாங்கனி’யில் இடம் பெறும் தொடர்கள், பின்னர், கவிஞர்…