வங்கி விவரம் கேட்டுப் பணம் திருடும் மோசடி பெருகிவருகின்றது!

வங்கி விவரம் கேட்டுப் பணத்திருட்டில் ஈடுபடுவோர் பெருகிவருகின்றனர்.   கோவை மாநகரில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து புது முறையில் பணம் திருடப்பட்டதாகக் கடந்த மூன்று மாதங்களில் 62 முறையீடுகள் (புகார்கள்) வந்துள்ளன. இது தொடர்பாகக் குற்றவாளிகளின் எண்களை வெளியிட்டு மின்வெளிக் குற்றப்பிரிவுக் (Cyber Crime) காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.   வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கைப்பேசிக்கு, அவர்களுடைய வங்கியின் மேலாளர் பேசுவதாக அழைப்பு விடுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பண அட்டை (ATM) விவரம், கடன் அட்டை (credit card) விவரம், பிறந்த நாள்…

தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடி

  தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் கடன் அட்டை முதலான   பணப்பொறி அட்டைகளின்  எண்களைத் தெரிந்து கொண்டு தொடர்புடையவர்களிடம்   மேலாளர் பேசுகிறேன் எனக்கூறி இரண்டாண்டுக்கு மேலானதால்   பணப்பொறியட்டை செயலிழந்து விட்டது என்றும் கடவுச்சொல்லை மாற்றினால் அதை நீக்கிச் செயல்பட வைக்கலாம் என்றும் கூறி கடவுச்சொல்லைப் பெற்றுப் பணத்தை எடுத்துவிடுகின்றனர்.   இதற்காக 9600367557 என்ற எண்ணில் இருந்து அழைக்கின்றனர்.அதன்பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தி மற்றும் மலையாளம் கலந்த மொழியில் பேசுகின்றனர்….

தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!

     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, பிற வங்கி  என்ற வேறுபாடின்றி ஒருவர் மொத்தமாக மாதம் ஐந்து தடவைக்குமேல் தானிப் பொறியைப் பயன்படுத்தினால் கட்டணம் பெற இந்திய வங்கிகள் சங்கம்,  சேம(ரிசர்வு) வங்கிக்குப் பரிந்துரைத்துள்ளது….