தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 9/17   திருமணம் காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்காதல் மணமேயக் காலத்தில் அம்மானைகாதல் மணமேயக் காலத்தி லாமாயின்ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானைசாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை       (41) நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானைசெந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானைவந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை       (42) தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே…

தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன்

(தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 10-12    தமிழ்நாட்டில் வானொலியை இயக்கு விக்கும் தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர் அமைத்ததனை அழைக்கின்றர் இந்தி தன்னை அருமுயற்சி செய்திங்கே பரப்பு கின்றார். சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச் சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார் நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானார் !   (10)   கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும் குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள் கள்ளமிலா நாட்டினரின் உள்ளங் தன்னைக் கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள்…

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்! – மறைமலை இலக்குவனார்

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!   வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது. தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின்…

தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! – பாவேந்தர் பாரதிதாசன்

இரகசியச்சொல் ஏடா தூதா இங்குவா தனியே என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர் இரகசி யச்சொல் இயம்பு கின்றேன் உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி இறந்தது வடமொழி என்று தமிழர் இயம்பி வந்த துண்டா இல்லையா? இறந்தது மெய்தான் என்னும் தமிழர் இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்! மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்? வடமொழி இறந்த தென்றதால் தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல் கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல் நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல் இன் தமிழ்ப் பயிற்சிக்…

பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? – பாரதிதாசன்

வடமொழி எதிர்ப்பு பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப் பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம் ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார் ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார் பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே? வீசாத வாளுக்குப் படைவீடொன்றா? வெள்ளியிறை பிடிஒன்றா வெட்கக்கேடே! வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த வஞ்சகர், தம் இல்லத்தில் பேசும் பேச்சு வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? கிழமைத்தாள், நாளின் ஏடு வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு வடமொழியா? நாடகங்கள் திரைப்படங்கள் வடமொழியா? மந்திரமென்று ஏமாற்றத்தான் வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ திரவிடரை அயலார்கள்…

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்   கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, பேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், மற்றும் அரபி, உருது, இந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து…