உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள்…

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி உலக அளவில், வலையொளி வழியாக தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது. வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம் இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான…