(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை   எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை.   நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,      குற்றமும் ஆங்கே தரும்.          பிறரது பொருளைப் பறிக்க        விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.   படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,      நடுஅன்மை நாணு பவர்           வருபயன் விரும்பிப், பழிப்புச்        செயல்களை நடுநிலையார் செய்யார்.   சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…