தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ்…
தமிழால் முடியாதது யாதும் இன்று – சி.இலக்குவனார்
தமிழால் முடியாதது யாதும் இன்று – சி.இலக்குவனார்
தமிழர் மலர்ச்சியே தமிழின் மலர்ச்சி – சி.இலக்குவனார்
தமிழர் மலர்ச்சியே தமிழின் மலர்ச்சி – சி.இலக்குவனார்
தமிழின் எதிர்காலம் என்ன? – சி.இலக்குவனார்
தமிழின் எதிர்காலம் என்ன? – சி.இலக்குவனார்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்: தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! உரைக்கும் மொழியும் உண்ணும் உணவும் “மக்களிடையே சமநிலைக் கொள்கையைப் பரப்பும் செயலில்தான் இப்பொழுது கருத்து செலுத்துதல் வேண்டும். இந்தியைத் தடுத்தலோ தமிழைப் புகுத்தலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்”; என்று சிலர் கருதுகின்றனர். ஒரு நாட்டின் வாழ்வியல் முறையும் பொருளியல் கொள்கையும் அவ்வப்போது தோன்றும் தலைவர்களுக்கு ஏற்ப மாறி அமையலாம். இன்று தனி உடைமைக் கொள்கையைப் பின்பற்றும் நாடு நாளை, பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றலாம். இன்று முடியாட்சியில் உள்ள நாடு நாளை, குடியாட்சியை…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு: பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ் உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) …….. (இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு: ) இக் கொடுஞ்சிறை வாழ்வைப் பெற்றது ஏன்? இந்தி மொழி மட்டும் முதன்மை பெற்றால் ஏனைய மொழிகள் அழிந்தொழியும் என்றும் தமிழர்கள் தமிழ் மொழி வழியாகப் படித்தலே தக்கது என்றும் உரைத்ததும் இக் கொள்கைகளைப் பரப்ப ஒல்லும் வகையால் முயன்றதுமேதான் இச்சிறை வாழ்வை எனக்கு அளித் தன. யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த்தா இன்னும் விடுதலை பெற்றிலள். ஒரு…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்: “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) பேராசிரியரைக் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதை அறிந்த புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அதனைப் பேராசிரியரிடம் தெரிவித்தார். சிறைசெல்லும் புலவர்சிலர் வேண்டும் இன்று செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும் முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டும் இன்று குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க் குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும் நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள் நிற்குமுதற் புலவன்நான் ஆகவேண்டும் (எழுத்தாளர் மன்றக் கவியரங்கில் முடியரசன் குறள்நெறி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார். தமிழ் உரிமைப்பெருநடை அணி குறிக்கோள்கள் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல். மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப்…
இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தித்திணிப்பு: தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? இந்தித்திணிப்பு என்பது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1918 இல் தென்பாரத இந்திப் பரப்புரை அவை (‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’) என்னும் அமைப்பு தொடங்கியபொழுதே தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்ததும் வேரூன்றியது. இந்தியா, குடியரசானதும் கிளை பரப்பியது. 1965 இல் இந்தியா என்றால் இந்தி என்பது முழுமையாக மாறும் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முன்னெடுப்பால் கிளைகள் பரவாமல் வெட்டப்பட்டன. எனினும் அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தி …
