திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார் தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்றுகின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களின் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவராகக் கூறிக்கொண்டு அந்தணர் என்றும் ஐயர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால், செயலில் வன்கண்மை பூண்டு தம் கூட்டத்தினர் அல்லாதவரை ஒடுக்கியும் இழித்தும் விலங்கினும் கீழாக நடத்தி வந்தனர். அதனால் வள்ளுவர் அந்தணர் யார் என்று விளக்கம் கொடுத்துப் போலி…
மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும்! பிறப்பால் உயர்வுதாழ்வு பேசுதல் பேதமை. ஒழுக்கத்தால் உயர்ந்தோரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார். ஒழுக்கக் கேடர்களே இழிந்த பிறப்பினர் ஆவார்கள். ஆதலின் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்று இடித்துரைத்தார். ஒழுக்கத்தால் உயர்வுபெறும் நெறி வெற்றி பெற்றிருக்குமேல், இன்று நாட்டில் பூசல்கள் தோன்றுமா? ஒழுக்கம் உடையாரை ஒதுக்கிப் புறக்கணிப்பதனால் அன்றோ இன்று எங்கு நோக்கினும் பூசற் களமாகக் காணப்படுகின்றது. மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், ஒழுக்கமுடையோர் உயர்ந்தோராகக் கருதப்பட்டு உயர்வாகப்…
வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்! – சி.இலக்குவனார்
வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார் வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும். அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதி்ரைகளைக் கொன்றனர். மக்கள் நலன்அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா? பேரருளாளர் வள்ளுவர்…
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார் மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். – பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் : குறளமுதம் பக்கம் 524
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர். ‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும் அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும் என்றே கூறி நன்றுதம் கட்சிப் பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’ (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45) தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 அங்கதம் தொல்காப்பியர் காலத்திலேயே அங்கதச் செய்யுள் பாடப்பட்டுள்ளன என்பதை அவர் எழுதிய நூற்பாவினால் அறியலாம். செம்பொருள், அங்கதம் என இருவகையாகக் கொள்வர் தொல்காப்பியர்.105 தொல்காப்பியத்தில் சொல்லப்படும் அங்கத வகை வளர்ச்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எனினும் சில தனிப்பாடல்களிலும் காவியங்களில் மட்டுமே ஆங்காங்கே அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அங்கத வடிவில் அமைந்த திறனாய்வாளர் கூறும் அங்கத இலக்கணங்கள் பொருந்தி நகையும் வினையமும் (irony) இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டு எழுந்த நூல்கள் மிக அரியனவே….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35 உமா மகேசுவரம்பிள்ளை தமிழகத்தில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் தொண்டர் இவர். தஞ்சை மாவட்டத்தின் நாட்டாண்மைக் கழகத் தலைவராய் இருந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் மாணவர்க்கு(பார்ப்பனர் அல்லாதார்) படிக்க உதவிகள் செய்தவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் மாத இதழை நடத்தியவர். தூய செந்தமிழ்த் தொண்டர். இத்தகைய பெரியார் மறைவு குறித்து ‘துன்பமாலை’ என்னும் தலைப்பில் கவிதை பாடியுள்ளார், இலக்குவனார். அறுசீர் ஆசிரிய விருத்தத்தால்…
வரலாற்றை மறைத்தும் வாழ வேண்டுமா? – சி.இலக்குவனார்
வரலாற்றை மறைத்தும் வாழ வேண்டுமா? இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழி இனங்களுள் தமிழினமே தொன்மை வரலாற்றுச் சிறப்பும் உயர்தனிச் செம்மொழியும் கொண்டுள்ளது. தமிழோடு உறழ் தரக்கூடிய ஆரியம் உலக வழக்கு அற்றதொன்றாயிருத்தலின் அதுபற்றி இங்கு ஆராய்ச்சியின்று. அது தவிர்த்த ஏனைய மொழிகள் எல்லாம் எல்லாவகையினும் தமிழுக்குப் பிற்பட்டனவே. இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத் தக்கது தமிழேயாகும். ஆயினும் இவ்வுண்மையைப் பலர் இன்னும் அறிந்திலர். கற்றவர்கள் என்று கருதப்படுவோருள் பலர் தமிழ்மொழி தமிழ்நாடு பற்றிய உண்மை வரலாறுகளை அறியாதவர்களாகவேயுள்ளனர். அவர்கள்…
தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள் முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் ! – சி.இலக்குவனார்
தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள் முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் ! பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் தமிழ் நாட்டவராக, தமிழராக வாழ வேண்டியதுதான் முறைமையாகும். அங்ஙனம் வாழ விரும்பாதவர்கள், அவர்களுடைய முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம். அங்ஙனமின்றி இந்த நாட்டில் இருந்து கொண்டே, இந்த நாட்டை, இந்த நாட்டு மொழியை, மக்களை எதிர்த்துக் கொண்டு, அழித்துக் கொண்டு வாழ நினைத்தால், தம் அழிவுக்கே வழி தேடியவர்கள் ஆவார்கள். – தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறள்நெறி (மலர்: 4…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன் அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார். மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம் கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 1.6 படையல் கவிதைகள் தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர். விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர். அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’…
திருவள்ளுவர் முதல் புரட்சியாளர் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் முதல் புரட்சியாளர் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர், அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்களின் பழைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாவற்றையும் களைந்தெறிய அறிவுரை கூறியுள்ளார். புரட்சி என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூடநம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயலுவதே ஆகும். பழமையைப் புரட்டிவிட்டு அகற்றிவிட்டு புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி…
