இழிவினை ஏற்படுத்தும் இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

    சில நேரங்களில் இடைச்செருகல் மூலநூலின் பெருமையை மிகுவிக்கும். ஆனால் இங்கோ தொல்காப்பியத்தின் தொன்மையைக் குறைத்தும், தமிழருக்கு இழிவுபடுத்தியும் அமைந்துள்ளன. இவ்விடைச்செருகல்களால்தான் தொல்காப்பியத்தின் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு எனப் பிற்பட்டக் காலத்திற்குக் கொண்டு வரப்பட்டு தமிழர் பண்பாடும் நாகரிகமும் ஆரியப் பண்பாட்டிலிருந்தும் நாகரிகத்திலிருந்தும் உருவானதாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies): பக்கம்21 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் தொல்காப்பியத்தின் கட்டமைப்பு நன்கு பின்னப்பட்ட கவின்கலை கூறுமிக்கத்தாக அமைந்துள்ளமையால் இவற்றின் கட்டமைப்பு அழகைச் சிதைக்காமல் மூலநூலில் எதையும் சேர்ப்பது என்பது உள்ளபடியே அரிதான செயலாகும். எனவே இக்கேள்விக்குரிய நூற்பாக்கள் தம்முடைய உண்மையான நிறத்திலேயே தோன்றுகின்றன. இவை எண்ணெயில் கலந்த நீராகத் தனித்து விளங்குகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம்20 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்

  சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்   மிகப்பழங்கால நூல்களில் இடைச்செருகல்கள் ஏற்படுவது மிக இயல்பான ஒன்றாகும். கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்திலும் இவ்வாறே ஏற்பட்டுள்ளது. குறும்புக்காரர்களின் கைகள் இதனைத் தொடாமல் விட்டு வைக்கவில்லை. எழுத்து அதிகாரமும் சொல் அதிகாரமும் தொகுப்பாக அமைந்து ஒவ்வொரு இயலின் பொருண்மையும் நிரல் பட அமைந்து நூற்பாக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளங்குகிறது. இவ்விரண்டும் மொழி குறித்த ஆய்வாகும். இடைச்செருகல் ஏற்பட்ட இடைக்காலத்தில் மொழிக் கல்வியில் யாருக்கும் நாட்டம் இல்லை என்பது தோன்றுகிறது.   ஆனால் பொருள்…

பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர் – சி.இலக்குவனார்

பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர் தமிழில் வழங்கிய பேர் எண், கோடிக்கு மேற்பட்டது. தமிழர்கட்கு நூற்றுக்குமேல் எண்ணத் தெரியாது என்றும் ‘ஆயிரம்’ என்ற சொல் கூட ‘சகசிரம்’ என்ற ஆரிய மொழியின் திரிபு என்றும் தமிழர் நிலையைத் தக்கவாறு அறியும் வாய்ப்பில்லாத ஒரு மேலைநாட்டார் கூறிச் சென்றார். ‘ஆயிரம்’ என்பது தமிழே. அதற்கு மேல் நூறாயிரம், கோடி என்றும் எண்ணினர். ‘கோடி’ என்றால் கடைசி என்றும் பொருள் உண்டு. எண்ணுமுறையில் அதுதான் இறுதியானது என்பதை உணர்த்தும் முறையில் கோடி என்று பெயரிட்டுள்ளனர். அதற்குமேல் வரும்…

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே – சி.இலக்குவனார்

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே! மொழி மரம் போன்றது. இதன் சொற்கள் இலைகள் போன்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல பழைய இலைகள் வீழும். புதிய இலைகள் தளிர்க்கும். மரம் அவ்வாறே நிற்கும். இதே போன்று தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை நிலைத்திருக்கின்றது. இவை என்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இதில் தடுக்க இயலாது. பிற மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே என்பது குறிப்பிடுதற்குரியது. –  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!   தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் “என்மனார்’ “என்ப’ “என்மனார் புலவர்’ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே…

தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்

  கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் அவரது அறிவுக்குச் சான்றாய்த் திகழ்கின்றது. – பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம் 20  

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலை நாட்டப்படும் உண்மையாக உள்ளது. … மண்ணிற் புதையுண்டு மறைந்த ‘ஆரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ நகரங்கள் வழங்கிய மொழி ‘தமிழே’ என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ்வுண்மையை வலியுறுத்தும். – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை   மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…